Welcome to Brhmaguru Astro Research Centre, your gateway to unlocking the secrets of the universe. As a dedicated and passionate astrologer, I'm thrilled to share my expertise with you. With years of experience in astrology, I've helped countless individuals navigate life's challenges and uncover their hidden potential.
At S.Harichandran, we believe that astrology is a powerful tool for self-discovery and personal growth. Our approach is centered around empowering you with the knowledge and insights needed to make informed decisions and navigate life's challenges.
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு !
நம் முன்னோர்களாகிய முனிவர்கள் தங்களது தவ வலிமையாலும், அறிவாற்றலாலும் வானின் கண் தோன்றியுள்ள சூரியன் முதலான
கோள்களையும், அசுவதி முதலான நட்சத்திரங்களையும், மேஷம் முதலான இராசிகளையும் மற்றும் பல கிரகங்களையும் ஆராய்ந்து சூரியனின் ஒளியை
கொண்டு உத்தராயணம், தக்ஷ்ணாயணம் என்ற பாகுபாட்டையும், வசந்தம் முதலான ருதுக்களையும், சித்திரை முதலான மாதங்க
ளையும், வளர்பிறை, தேய்பிறை என்ற இரு பக்ஷ்ங்களையும், நாள், திதி, யோகம், கரணம் போன்ற பஞ்சாங்கத்தையும் அதன் காலஅளவையும் நிர்ணயித்து மேலும் வான ஆராய்ச்சிக்கு உரிய நுட்பமான பல விஷயங்களையும் தங்கள் கணித அறிவால் ஆராய்ச்சி செய்து வானசாஸ்திரத்தை உருவாக்கினார்கள். இந்த சாஸ்திரம் மூலம்
மனிதனின் வாழ்வின் வருங்கால இன்பதுன்பங்களை முன் கூட்டி அறிந்து கொள்ள பயன்படும் கலையே ஜோதிடக் கலை ஆகும்.
தாய் வயிற்றிலிருந்து குழந்தை கருவாக உருவாகி இம்மண்ணுலகில் குழந்தை பிறக்கும் அதே தருணத்தில் வானில் உலவும் இதர ஒன்பது
கோள்களின் நிலையை அடிப்படையாய்க் கொண்டு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழப் போகும்
யாவற்றையும் அறிந்து கொள்ள உதவும் ஓர் கணிதக் கலையே ஜோதிட சாஸ்திரம்,
இப்பிறப்பில் மனிதன் ஒருவனுக்கு இறைவனால் தொகுத்தளிக்கப்பட்டுள்ள பிராராப்தப் பகுதியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்ற ஓர்
அற்புதமான கணிதக் கலையே இது! ஆனால் இக்கலையின் பலித்தத்திற்கு முக்கியமான நிபந்தனைகள் மூன்றுண்டு அவை
1. குழந்தை பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் இம்மூன்றும் இம்மியும் பிறழாதபடிச் சரியாக நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.
2. ஜாதகத்தைப் பிழையின்றி கணித்து வரையும் திறமை ஜோதிடருக்கு இருக்க வேண்டும்.
3. ஜாதகப் பலனை கூறும் ஜோதிடர் பலன் கேட்கவந்தவரின் மனநிலையை புரிந்து அதற்கு தக்கவாறு முகஸ்துதி செய்து பணத்துக்கோ, புகழுக்கோ ஆசைப்படும்
துர்க்குணம் இல்லாதவராயும், இராசி மற்றும் கிரகத்தின் குண, பாவ, பலத்தை நன்கு உணர்ந்து குரு மொழியில் நம்பிக்கை கொண்டு அதன்மூலம் கிடைக்கும் உண்மையான அனுமானபலத்தை எடுத்துரைக்கும் வாக்கு வன்மையான ஜோதிடராக இருக்கவேண்டும்.
இம்மூன்றில் ஒரு தகுதி இல்லாமல் போனாலுங்கூட ஜாதகப் பலன்தவறாகிவிடும்.
மனிதர்கள் எப்போதும் மனத்தால் தனக்கு தானே ஒரு கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். அது என்னவென்றால்
நான் இதை இப்போது செய்யலாமா? என் எண்ணம் நிறைவேறுமா? என் எண்ணம் சரியா? அல்லது தவறா? நான் இதை எப்போது செய்யலாம்?
என் தேடுதல் ஆசை எப்போது நடக்கும்? நான் இந்த கஷ்டத்தில் இருந்து எப்போது விடுதலை அடைவேன்? இது போன்ற தேடுதலான
பல கேள்விகளுக்கு விடையே தனக்குள்ளே தேடுகின்றனர் அந்த கேள்விகளுக்கு தகுந்த பதிலை அறிவு பக்குவப்பட்ட மனிதர்கள் தனக்கு
தானே தேடி வெற்றிக்கொள்கின்றனர். இவர்களுக்கு ஜோதிடமும், ஜோதிட ஆலோசனையும் தேவையில்லாத ஒன்று தான்.
ஆனால் பலவாறாக சிந்தித்தும் அறிவு தெளிவு பெறாமல் கலக்கம் பெற்ற மனிதனுக்கு ஒரு அறிவுரை தேவைப்படுகிறது.
இவர்களுக்கு தான் ஜோதிட சாஸ்திரம் துணைபுரிகின்றது. இப்படி கலக்கம் பெற்று வரும் மனிதனுக்கு அவன் பிறவி ஜாதகத்தை
தெளிவான முறையில் ஆராய்ச்சி செய்து அதன்மூலம் கிடைக்கும் கிரக குண பலன்களையும்
அவன் பருவகாலதிசா பலனையும் உணர்ந்து அவன் அறிவு தெளியும் வரை போதிக்க வேண்டும்.
இதுவே ஒரு குரு மொழி உணர்ந்த ஜோதிடரின் கடமையாகும்.
இதுவல்லாமல் இன்றைய விளம்பரத்திற்கு வேண்டி ஜோதிடத்திற்கு சம்பந்தம் இல்லாத எண் கணிதம், கையெழுத்து ஜோதிடம், பெயர் மாற்றுதல், ஆவிகளோடு பேசுதல் போன்ற ஏமாற்று கலையை பயன்படுத்தி அறிவு தெளிவு இல்லாமல் வரும் மனிதனை ஏமாற்றுவது, அபயம் என்று வருபவனை ஏமாற்றுவதற்கு சமம். மனிதனின் மனத்தில் ஒருவகையான திகில் பயத்தை உருவாக்கி கலங்கவைத்து அதை நிவர்த்தி பண்ண பரிகாரம் 'என்ற பணம்பறிக்கும் வித்தை செய்யும் ஜோதிடர்கள் ஜோதிட சாஸ்திரத்திற்கு புறம்பானவர்கள். அவர்களை மக்கள் இனம் கண்டுகொள்ளவே நான் இதை இங்கு சொல்கின்றேன்.
சித்தர்களின் நல்ல எண்ணத்தால் உருவான ஜோதிடம் பிறவி வினையை அகற்றி ஆத்மா செரூபம் கண்டு ஆனந்தம் அடைய வைப்பதல்லாமல் மனிதர்களை ஏமாற்றி தீயவழியில் தள்ளுவதல்ல. ஒரு கஷ்டதுக்கம் வரும்போது அதை தாங்கும் மனநிலையை பெறுவதற்கு ஏற்ற நல்ல ஒழுக்கமான வழிமுறையை இந்த ஜோதிட சாஸ்திரம் சொல்லுமே தவிர, பரிகாரத்தால் கஷ்டத்தை மாற்றி மனிதனை எப்போதும் சந்தோஷமாக வைக்கமுடியும் என்று ஒருபோதும் சொல்லாது. உணர்ந்த உணரும் உயிர் என்ற தத்துவத்தின் படி மனிதனின் உள்கிடக்கும் உயிரின் குணத்தையும், செயல்பாட்டையும் அவன் நல்வினைக்கு தகுந்த பருவக்காலத்தை சுட்டிகாட்டி செயல்பட வைப்பதுதான் ஒரு ஜோதிடரின் கடமை.
ஜோதிடத்தின்மூலம் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை இடம், பொருள், காலம், நிமித்தம் போன்ற காரண காரியத்தின் மூலம் தெளிவாக அறிய முடியும்.
ஜோதிடத்தை நம்புங்கள் ஆனால் அதற்கு அடிமையாகி விடாதீர்கள்.
நன்றி!
ஜோதிடர் S.அரிச்சந்திரன்
© 2024, All Rights Reserved, Brahmaguru
Designed by, Rathna Softnet